பக்கம் எண் :

43


 

ஆடு கத்தியது!

பள்ளிக் கூட நண்பன் ஒருவன்
     பலத்தில் மிக்கவன்,
பக்கு வமாய் காந்தி யிடத்தே
     கூற லாயினன் :
“வெள்ளைக் காரன் நம்மை அடக்கி
     ஆண்டு வருவதும்,
வீர மாகக் காரி யங்கள்
     செய்து வருவதும்,

ஆட்டுக் கறியும், மாட்டுக் கறியும்
     தின்ப தாலேதான்.
ஐய மில்லை. இதனை நீயும்
     அறிந்து கொள்ளுவாய்.