பக்கம் எண் :

44

நாட்டை விட்டே அவர்கள் தம்மை
     ஓட்ட விரும்பினால்,
நாமும் நன்கு மாமி சத்தைத்
     தின்ன வேண்டுமே.

ஒட்டி உலர்ந்த உனது தேகம்
     உறுதி பெற்றிட
உண்ண வேண்டும் மாமி சத்தை,
     தினமும் நீயுமே.
தட்டிச் சொல்ல நினைக்கி றாயோ?
     தயக்கம் ஏனடா?
தயவு செய்தே எனது சொல்லைக்
     கேளடா” என்றான்.

“எங்கள் வீட்டில் எவரும் இறைச்சி
     தின்ப தில்லையே.
இதற்கு நானும் இணங்கி னாலும்
     என்ன பயனடா?
எங்கு வைத்து மாமி சத்தைத்
     தின்று தீர்ப்பதோ?”
என்று காந்தி அவனைப் பார்த்துக்
     கேட்க லாயினர்.