‘அரிச்சந் திரனின் நாட கத்தைக் கண்டேன் நானுமே. அவரைப் போல உண்மை பேச நினைத்தேன் நானுமே. பெரிய குற்றம் செய்து விட்டேன். ஐயோ, இதனைநான் பிரிய முள்ள தந்தை யிடத்தில் சொன்ன பிறகுதான், மனத்தில் அமைதி நிவும்’ என்றே காந்தி நினைத்தனர். வாயை விட்டு கூறு தற்கோ மிகவும் அஞ்சினர். குணத்தில் உயர்ந்த தந்தை இந்தத் திருட்டைக் கேட்டிடின் கொள்ளு வாரே மிகுந்த வருத்தம் என்று தயங்கினர். திரும்பத் திரும்ப காந்தி இதனை எண்ணி எண்ணியே செய்வ தேதும் அறிந் திடாமல் திகைத்து நின்றனர். | | |
|
|