பக்கம் எண் :

51

இறுதி யாக நடந்த தெல்லாம்
     காகி தத்திலே,
இதயம் திறந்தே எழுத லானார்
     உருக்க மாகவே.
 


“தந்தை யாரே, தங்கள் மனசு
     நோகும் வகையிலே
தவறு செய்து விட்டேன்; மன்னித்
     தருள வேண்டுமே.
எந்த நாளும் இதுபோல் தவறு
     செய்ய மாட்டேன்நான்”
என்று கடித முடிவில் காந்தி
     எழுதி யிருந்தனர்.