பக்கம் எண் :

66

குழம்பு ஒன்றை அவர்கள் முன்பு
     கொண்டு வந்து வைத்ததும்,
பழக்க மில்லா காந்தி அதனைப்
     பார்த்தே விழிக்க லாயினர்.


‘இந்தக் குழம்பில் புலால் கலந்தே
     இருக்கு மோ’ என் றஞ்சியே
அந்த விடுதி ஆளை மெதுவாய்
     அருகில் காந்தி அழைத்தனர்.