பக்கம் எண் :

65

காந்தி பட்ட துன்பம் யாவும்
     கண்டார் நேரில். ஆதலால்,
“ஏன்தான் இந்த நாட்டில் வந்தே
     இன்னல் பெரிதும் அடைகிறீர்?

கூழும் ரொட்டித் துண்டும் வயிற்றைக்
     கொஞ்ச மேனும் நிரப்புமோ?
கோழிக் கறியும் ஆட்டுக் கறியும்
     கொடுக்கும் நல்ல இன்பமே.”

என்று தினமும் இடைவி டாமல்
     எடுத்துக் கூறி வந்திடும்
அந்த நண்ப ரோடு காந்தி
     அன்று வெளியே கிளம்பினார்.

லண்டன் நகரில் நடந்து வந்த
     நாட கத்தைக் காணவே,
அன்று மாலை ஆவ லாக
     அவர்கள் நடந்து சென்றனர்.

செல்லும் போது வழியில் இருந்த
     சிறந்த உணவு விடுதியின்
உள்ளே காந்தி தம்மை நண்பர்
     உடன ழைத்துச் சென்றனர்.