பக்கம் எண் :

68

இங்கும் அங்கும் அலைந்து பார்த்தும்
     ஏற்ற உணவில் லாததால்
எங்கும் சாப்பி டாமல் காந்தி
     ஏக்கத் தோடு திரும்பினார்.

அன்று பசியி னாலே இரவில்
     அவதிப் பட்டார். ஆயினும்
அன்னை சொல்லைக் காத்தோம் என்றே
     அகம் மகிழ்ந்தார் காந்தியும்!