பக்கம் எண் :

69

ஆங்கிலக் கனவான்

ஆங்கிலக் கனவான் போலேநாம்
ஆகிட வேண்டும் என, காந்தி

ஆசை கொண்டார். ஆதலினால்
காசைத் துணிந்தே செலவழித்தார்.

பம்பாய் நகரில் வாங்கியவை
பார்க்க அழகாய் இல்லையெனப்

புதுப்புது உடைகள் வாங்கினரே.
பூரிப் புடனே அணிந்தனரே.

‘நடைஉடை பாவனை யாவிலுமே
நாம்ஒரு கனவான் ஆகிடுவோம்.

கனவான் ஆக முதல்முதலில்
கற்றிட வேண்டும் நடனமுமே’

என்றே காந்தி எண்ணினரே;
ஏற்ற ஒருவரை அமர்த்தினரே.

தினமும் அவரிடம் சென்றனரே.
சென்று நடனம் பயின்றனரே.