பக்கம் எண் :

70


காலைக் கையை
    ஆட்டிஅவர்
கருத்தாய் நடனம்
    பயின்றாலும்,

சங்கீ தத்துக்
    கேற்றபடி
சரியாய் ஆட
    வரவில்லை!

‘சங்கீ தத்தைக்
    கற்றால்தான்
சரியாய் நடனம்
    ஆடவரும்’

என்றே காந்தி எண்ணினரே.
இதற்கொரு வழியும் கண்டனரே.

காசைக் கொடுத்துப் பிடில்ஒன்றைக்
கடையில் வாங்கினர் ஆவலுடன்.

ஆங்கிலப் பெண்மணி ஒருவரையே
அமர்த்தினர் கற்றுத் தந்திடவே.