அனுதினம் பிடிலைக் கற்றனரே. ஆயினும் பயனைக் காணோமே! மேடையில் ஏறி ஆங்கிலத்தில் மிகமிக நன்றாய்ப் பேசிடவும் பணத்தைக் கொடுத்தே ஒருவரிடம் பயிற்சி பெற்று வந்தனரே ஒருநாள் காந்தி உள்ளத்தில் யோசனை ஒன்று உதித்ததுவே. ‘அண்ணன் அடிக்கடி பணத்தினையே அனுப்புவ தெல்லாம் எதற்காக? ஆங்கிலக் கனவான் ஆவதற்கா? அவசிய மின்றிச் செலவிடவா? பாங்குடன் படித்துப் பாரிஸ்டர் பட்டம் பெறவே, ஆசையுடன் அண்ணன் பணத்தை அனுப்புகிறார். ஐயோ, இதைநான் மறந்தேனே. இன்றுடன் இந்தப் பயிற்சியெல்லாம் எனக்குத் தேவை இல்லை’யென |