பக்கம் எண் :

84

காந்தியை தலைமை ஆசிரியர்
கண்டதும், “நீங்கள் பி. ஏ. யா?”

என்றே கேட்க காந்தியுமே,
“இல்லை. லண்டன் மெட்ரிக்தான்.

லத்தீன் மொழியும் கற்றவன்நான்.
லண்டனின் படித்து வந்தவன்நான்”

என்றார். ஆயினும் இவர்பேச்சை
ஏற்றுக் கொள்ள வில்லைஅவர்.

“பி. ஏ. பட்டம் பெற்றவர்தான்
பேசிட வேண்டும் இதுபற்றி”

என்றே தலைமை ஆசிரியர்
கண்டிப் பாகக் கூறிடவே,

காந்தி ஏமாற் றத்துடனே
கைகள் இரண்டையும் பிசைந்தபடி

வீட்டை நோக்கித் திரும்பினரே;
வேதனை மிகவும் கொண்டனரே.