பலமுறை சிறையில் அடைத்துவைத்தும் பணிய மறுத்தனர் இந்தியர்கள். உலகமே கண்டு வியந்ததுவே; உத்தமர் காந்தியைப் போற்றியதே. உரிமையைக் காத்திட எட்டாண்டு உறுதியாய் இந்தியர் போரிடவே, இறுதியில் அரசு பணிந்ததுவே. ஏற்பட லாச்சே உடன்பாடு! உரிமைகள் பற்பல பெற்றனரே, உத்தமர் காந்தி முயற்சியினால்! தருமமே வெற்றி பெற்றதுவே, சாந்த மகானது சத்தியினால்! ‘தென்னாப் பிரிக்காவில் இந்தியர்கள் சேமமாய் இனிமேல் வாழ்ந்திடலாம்’ என்னும் இனியதோர் நிலைமையுமே ஏற்பட லானது காந்தியினால். அந்நிய நாட்டினில் இந்தியரின் அல்லலைத் தீர்த்தபின் அண்ணலுமே சொந்தநம் பாரத நாட்டினிலே தொண்டு புரிந்திட ஆசைகொண்டார். | | |
|
|