சத்தியப் போரை காந்தியுமே சாந்த முறையில் துவக்கினரே. சத்தியம், உறுதி சேர்ந்ததனால் ‘சத்தியாக் கிரகம்’ என்றனரே. சத்தியாக் கிரகம் செய்துவந்த தலைவராம் காந்தியின் பின்னாலே, பத்தா யிரத்துக்கும் மேலானோர் படையெனத் திரண்டு வந்தனரே. காந்தியைச் சர்க்கார் பிடித்தனரே; கைதியாய்ச் சிறையில் அடைத்தனரே. சேர்ந்து பலருமே காந்தியுடன், சிறையினில் வாடி வதங்கினரே. இந்தியப் பெண்களும் அஞ்சவில்லை. எதிர்த்துச் சிறைக்குமே சென்றனரே. நந்தமிழ் நாட்டு வள்ளியம்மை நல்லவ ளும்அதில் சேர்ந்தனளே. நேரிய வழியில் போர்புரிந்தார்; நீதியைக் காத்திடப் போர்புரிந்தார். சோர்வடை யாமலே போர்புரிந்தார், தூயவர் காந்தி தலைமையிலே. |  | | |
|
|