பக்கம் எண் :

12

பெரியோர் வாழ்விலே


ஆயினும், எவ்வளவு புத்திசாலியாயிருக்கிறான் !  அவனை நன்றாகப் படிக்க வைத்தால்,
மிகமிகக் கெட்டிக்காரனாக விளங்குவான். படிக்க வேண்டிய பருவத்தில், வேலையில்
வைத்திருப்பது சரியில்லை’ என்று அவருக்குத் தோன்றியது.

     அந்த தாசில்தார் வீட்டில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் தாசில்தாருடைய தங்கை மகன். அவனுக்கும் முத்துசாமியின் வயதுதான் இருக்கும். அவனையும், முத்துசாமியையும்
ஒன்றாக உட்காரவைத்து, தாசில்தார் தினமும் பாடம் சொல்லிக் கொடுப்பார்.

     ஒரு நாள், அவர் ஆங்கில ஆரம்பப் பாடப் புத்தகத்தில், இரண்டு பிரதிகளைக்
கடையில் வாங்கி வந்தார். முத்துசாமியிடம் ஒரு பிரதியையும், தங்கை மகனிடம் மற்றொரு
பிரதியையும் கொடுத்தார். அதிலுள்ள பாடங்களை வழக்கம் போல் சொல்லிக் கொடுத்து
வந்தார்.

     சில நாட்கள் சென்றன. தாசில்தார் இருவரையும் நோக்கி, “நான் அடுத்த வாரம்
உங்கள் இருவருக்கும் ஆங்கிலத்தில் பரீட்சை வைக்கப் போகிறேன். உங்கள் இருவரில்
எவன் கெட்டிக்காரன் என்பதைப் பார்க்க வேண்டும்” என்றார்.

     அவ்வாறே ஒரு வாரம் சென்றதும், இருவருக்கும் பரீட்சை வைத்தார். தாசில்தாரின்
தங்கை மகன் ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் எழுதியிருந்தான். ஆனால்,
முத்துசாமியோ எல்லாக் கேள்விக்கும் பதில் எழுதியிருந்தார் ;  சரியாக எழுதியிருந்தார் !