பக்கம் எண் :

ஒரு ரூபாய் ஊழியர்

11


வேலை கிடையாது. அந்த நேரத்தை அவர் வீணாக்க மாட்டார். அங்கேயிருந்த ஒரு
பள்ளிக்கூடத்திற்கு அவர் போவார்; உள்ளே போய் உட்காரமாட்டார். வெளியே ஜன்னல்
ஓரமாக நின்று கொள்வார். ஆசிரியர் மற்ற பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைக்
கவனமாகக் கேட்பார். இப்படியே சில நாட்கள் சென்றன. மிகவும் எளிதாகப் பல ஆங்கிலச்
சொற்களை அவர் கற்றுக்கொண்டு விட்டார்.

     தினமும் ஜன்னல் ஓரமாக ஒரு சிறுவன் வந்து நிற்பதையும், அவன் பாடங்களைக்
கருத்துடன் கேட்பதையும் ஆசிரியர் கவனித்தார். ஒரு நாள் அவர் முத்துசாமியை உள்ளே
அழைத்து, “தம்பி, தினமும் ஏன் இப்படிக் கால் வலிக்கத் தெருவில் நிற்கிறாய்? உன்
அப்பா, அம்மாவிடம் சொல்லி இந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கச் சொல்வது தானே!”
என்றார். முத்துசாமி பதில் எதுவும் சொல்லவில்லை.

     ‘நாள்தோறும் நம் பள்ளிக்கு வருகிறானே, இந்தச் சிறுவன் யார்?’ என்று ஆசிரியர்
விசாரித்தார். அப்போதுதான் அவருக்கு முத்துசாமியைப் பற்றித் தெரிந்தது.

     அன்றே ஆசிரியர் தாசில்தாரிடம் சென்றார்.

     கல்வி கற்பதில் முத்துசாமிக்கு உள்ள ஆர்வத்தை எடுத்துச் சொன்னார். தாசில்தார்
அது கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ‘முத்துசாமி வயதிலே சிறியவன். அவன்
படித்திருப்பதோ மிகவும் குறைவு.