பக்கம் எண் :

10

பெரியோர் வாழ்விலே


     அடேயப்பா! அவ்வளவு பெரிய தொகையா! சம்பளத்தை 30 மடங்காகக்
கொடுத்திருந்தால், முத்துசாமிக்கு 30 ரூபாய் கிடைத்திருக்கும். ஆனால் மூன்று மடங்காகக்
கொடுத்ததால், மூன்றே ரூபாய் தான் கிடைத்தது. ஆம், முத்துசாமி முன்பு வாங்கிய
சம்பளம் மாதம் ஒன்றுக்கு முழுசாக ஒரு ரூபாய்தானே!

     அன்று ஒரு ரூபாய் சம்பளத்தில் கணக்குப் பிள்ளைக்கு உதவி ஆளாக இருந்த
முத்துசாமி, பிற்காலத்தில் ஆயிரம் ஆயிரமாகச் சம்பளம் வாங்கினார்! சர். டி. முத்துசாமி
அய்யர் என்ற பெயர் தான் உங்களுக்குத் தெரியுமே! இதுவரை படித்ததெல்லாம் அவரைப்
பற்றித்தான்!

     அந்தக் காலத்தில் நீதிபதிகளெல்லாம் வெள்ளைக்காரர்களாகத்தான் இருப்பார்கள்.
இந்தியர்களுக்கு அந்தப் பதவி கிடைப்பதே இல்லை. ஆனாலும், முதல் முதலாக அந்தப்
பெரிய பதவியைப் பெற்ற இந்தியர் சர்.டி.முத்துசாமி அய்யர்தான்!

* * *

     முத்துசாமி அய்யர் தாசில்தாரிடம் மூன்று ரூபாய் உத்தியோகத்தில் இருந்தபோது
ஓரளவு தமிழ் படித்திருந்தார். ஆனால், ஆங்கிலத்தில் ஓர் எழுத்துக்கூடத் தெரியாது.
ஆயினும், ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது.

     தினமும் காலை பதினோரு மணியிலிருந்து பிற்பகல் இரண்டு மணிவரை அவருக்கு