பக்கம் எண் :

ஒரு ரூபாய் ஊழியர்

17


கண்ணை மூடிக் கொள்வார். இறகு பேனாவை முகத்துக்கு அருகே வைத்துக் கொள்வார்.

     வக்கீல்கள் விவாதம் செய்வதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டேயிருப்பார்.
அப்போது வக்கீல்கள் அடிக்கடி அவரது வலது காலைக் கவனிப்பார்கள். அவருடைய
முகத்தையல்லவா கவனிக்க வேண்டும்? ஏன் காலையே கவனிக்கிறார்கள்? காரணத்தோடு
தான்.

     ஒரு வக்கீல் எடுத்துச் சொல்லும் போது, முத்துசாமி அய்யர் தமது வலது கால்
கட்டை விரலைப் பக்கத்து விரலுடன் அழுத்தினால், “சரி, இனி நாம் பேசிப் பயனில்லை.
நம் வழக்குத் தோற்றுவிடும்” என்ற முடிவுக்கு அந்த வக்கீல் வந்து விடுவார். தீர்ப்பும்
அப்படித்தான் இருக்கும்.

(முத்துசாமி அய்யர்)