பக்கம் எண் :


விளையாட ஒரு தோழி


     போர்பந்தரில் ஒரு திவான் இருந்தார். அதே ஊரில் பெரிய பணக்கார வியாபாரி
ஒருவரும் இருந்தார். இருவரும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் தங்களுடைய
நட்பை இன்னும் உறுதிப்படுத்த நினைத்தார்கள். நினைத்தபடி ஒரு திட்டம் போட்டார்கள்.
திவானுடைய மகனுக்கும் வியாபாரியினுடைய மகளுக்கும் கல்யாணம் செய்து வைத்து
விடுவது ;  இருவரும் சம்பந்திகள் ஆகிவிடுவது !  இதுதான் அவர்கள் போட்ட திட்டம்.

     அந்தத் திட்டப்படியே திவான் மகனுக்கும், வியாபாரி மகளுக்கும் கல்யாணம்
நடந்தது. அப்போது அந்தப் பெண்ணுக்கு வயது என்ன