பக்கம் எண் :

20

பெரியோர் வாழ்விலே


கொடுத்து விட வேண்டும் என்று காந்திஜி நினைத்தார். ஆனால், பெரியவர்கள் முன்னால்,
கஸ்தூரிபாய்க்கு பாடம் சொல்லிக்கொடுக்க அவருக்குத் துணிச்சல் வரவில்லை. இரவு நேரங்களில் மட்டுமே சொல்லிக் கொடுத்து வந்தார். அத்துடன், கஸ்தூரிபாய்க்கு அப்போது
கல்வியில் அதிகமான அக்கறை கிடையாது. ஆமை வேகத்தில் பாடம் நடந்து
கொண்டிருந்தது. சுமாராக எழுதவும், எழுத்துக் கூட்டிப் படிக்கவுமே அப்போது கற்றுக்
கொண்டார் கஸ்தூரிபாய்.

     ஆனால், பிற்காலத்தில் காந்திஜியுடன் சேர்ந்து பல இடங்களுக்கும் சென்றபோது,
மற்றவர்கள் புத்தகம், பத்திரிகைகள் படிப்பதை மிகவும் கவனமாகப் பார்ப்பார். ‘நாமும்
இவர்களைப் போல நன்றாகப் படிக்க வேண்டும்’ என்று ஆசைப்படுவார். அந்த ஆசை
வளர்ந்து கொண்டே வந்தது.

     நாளடைவில், பகவத் கீதையைப் படிக்கும் அளவிற்கு கஸ்தூரிபாயின் கல்வியறிவு
வளர்ந்து விட்டது !  பகவத் கீதையை அடிக்கடி படித்து அப்படியே மனப்பாடம்
செய்துவிட்டார் ! 

     மனக் கஷ்டம் ஏற்படும்போதெல்லாம் பகவத் கீதையைப் பாராயணம் செய்ய
ஆரம்பித்து விடுவார் கஸ்தூரிபாய்.

* * *

     காந்திஜி தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது பலமுறை சத்தியாக்கிரகம்
செய்திருக்கிறார்.அந்தச் சத்தியாக்கிரகங்களில் ஆரம்பகாலத்தில் ஆண்கள் மட்டுமே
கலந்து கொண்டார்கள்.