விளையாட ஒரு தோழி | 25 | அவசரக் கடிதம் ஒன்று அனுப்பிவிட்டார். கடிதத்தைக் கண்டதும், காந்திஜி ஓடோடி வந்தார். கஸ்தூரிபாயை அவர் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. டாக்டர் உத்தரவுப்படி கஸ்தூரிபாயைத் தம் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். கஸ்தூரிபாயின் உடல்நிலை மிகவும் கவலைக்கு இடமாயிருப்பதைக் கண்டு காந்திஜி கலங்கினார். ஆனாலும், கஸ்தூரிபாய் கலங்க வில்லை.
“பயப்படாதீர்கள் ! நான் பிழைத்து விடுவேன். மாமிசம் சாப்பிடுவது தர்மமல்ல என்பது தங்களுக்குத் தெரியாதா? மாமிசம் சாப்பிடுவதைவிட, தங்கள் மடியில் தலை வைத்தபடி சாவதையே நான் விரும்புவேன்” என்று மலர்ந்த முகத்துடன் கூறினார்.
நல்லவேளையாக மாமிசம் சாப்பிடாமலேயே கஸ்தூரிபாய் அப்போது பிழைத்துவிட்டார். ஆனால், அவர் 1944-இல் இறந்தபோது, அன்று கூறியதுபோல் காந்திஜியின் மடியில் தலை வைத்தபடியேதான் இறந்தார் !
(கஸ்தூரிபாய்) |  |
|
|
|
|