பக்கம் எண் :

24

பெரியோர் வாழ்விலே


     ஆனால், கஸ்தூரிபாய் கலங்கவில்லை. “எதற்காகப் பயப்படுகிறீர்கள்? ‘ஆபரேஷன்’
செய்து கொள்வதில் எனக்கு ஆட்சேபணையே இல்லை” என்று தைரியமாகக் கூறினார்.

     பிறகு, டாக்டர் ஆபரேஷன் செய்தார். ஆபரேஷன் முடிந்து ஒன்றிரண்டு நாட்களில்
காந்திஜி ஓர் அவசர வேலையாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. டாக்டரிடத்திலும்
டாக்டர் மனைவியிடத்திலும் கஸ்தூரிபாயைக் கவனித்துக் கொள்ளச் சொல்லி விட்டுக்
காந்திஜி சென்று விட்டார்.

     ஆபரேஷன் செய்தபிறகு கூட கஸ்தூரிபாயின் உடல்நிலை சீர்திருந்தவில்லை.
அதற்கு மாறாக, மோசமாகிக் கொண்டே வந்தது. எழுந்து உட்கார முடியவில்லை ; 
சரியாகப் பேசக்கூட முடியவில்லை.

     டாக்டருக்கு வரவர பயம் ஏற்பட்டது. காந்திஜிக்கு உடனே அவர் கடிதம் எழுதினார்.
“கஸ்தூரிபாய் மாட்டு இறைச்சி கலந்த உணவு சாப்பிட்டால்தான் பிழைப்பார். இல்லாவிடில்
உயிருக்கே ஆபத்து !”  என்று எழுதினார்.

     அதற்கு காந்திஜி, “அவள் விரும்பினால் கொடுக்கலாம்” என்று பதில் எழுதினார்.

     ஆனால், கஸ்தூரிபாய் மாமிசம் சாப்பிட இணங்கவில்லை.

     உடனே, டாக்டருக்குக் கோபம் வந்து விட்டது.

     “என் வீட்டில் இனி கஸ்தூரிபாயை வைத்துக் கொள்ள முடியாது. நீங்கள் உடனே
வந்து கூட்டிச் சென்றுவிடுங்கள்” என்று அவர் காந்திஜிக்கு