பெயரை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனந்த வருஷத்தில் அன்று சின்னப் பாப்பாவாகப் பிறந்தவர் இந்தத் தமிழ்த் தாத்தாதான் ! * * *
தமிழ்த் தாத்தாவாகிய சாமிநாதய்யர் குழந்தையாக இருந்தபோது, ‘சாமா’, ‘சாமா’ என்றே வீட்டிலுள்ளவர்கள் அழைப்பார்கள். சாமாவிடம் அப்போது வேடிக்கையான ஒரு பழக்கம் இருந்தது. காலையில் எழுந்தவுடனே, அவருக்குப் பசி வந்து விடும் ! உடனே, ஏதாவது உணவு கொடுத்தாக வேண்டும். இந்தக் காலமாக இருந்தால், கடையிலே ரொட்டியை வாங்கி வந்து தயாராக வைத்திருக்கலாம் ; காலையில் எழுந்தவுடன் கொடுக்கலாம். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பு ரொட்டிக்கு எங்கே போவது? அதை யெல்லாம் அப்போது இருந்தவர்கள் பார்த்ததுகூட இல்லை ! ஆனாலும், சாமாவுக்கு ஏதாவது கொடுத்தாக வேண்டுமே ! அதிர்ஷ்டக் குழந்தையின் மனம் நோக அம்மா விடுவார்களா?
கோழி கூவும்போதே எழுந்து பிள்ளைக்காக அப்பம் தயார் செய்யத் தொடங்கிவிடுவார்கள். அந்த அப்பத்திற்குக் ‘கரண்டி அப்பம்’ என்று பெயர். அந்த அப்பத்தைச் சாமா படுத்திருக்கும் இடத்திற்குப் பக்கத்திலே ஓர் இலையின் மேல் வைப்பார்கள். மேலே ஒரு பாத்திரத்தைப் போட்டு மூடிவிடுவார்கள். சாமா எழுந்ததும், அந்தப் பாத்திரத்தை ஒரு தட்டுத் தட்டுவாராம். உடனே, உள்ளேயிருக்கும் கரண்டி அப்பம் காட்சி தருமாம். அதை எடுத்து ஆசையாகத் |