| பாண்டியன் | : | (கணியரை நோக்கி) நலமுரை கணியீர் நாவசைத் திலீர்நும் உளமெது கருதினும் உடன்வாய் மலர்க |
| கணியன் | : | பாண்டிய நாட்டில் வேண்டிய பெறுதலின் ஈண்டொரு குறையிலை எனினும் . . . . |
| பாண்டியன் | : | . . . . . . . . . எனினும் கருதிய துரையின் கணியர் நும்மொழி விரைவில் நிறைவுறும் விளம்புக விளம்புக; |
| கணியன் | : | கலங்கேல் மன்னவ காவலன் நலமும் நலங்கெழு கோவில் நலமுங் கருதினென்; |
| பாண்டியன் | : | ஓதுமின் ஓதுமின் வேதியர் பெரும யாதுநும் முளமென அறியும் விழைவினம்; |
| கணியன் | : | முக்கட் செல்வன் முதுபெருங் கோவிலும் தெற்கின் மேய செவ்வேள் குன்றும் வடபால் மேய மாலிருஞ் சோலையும் வடமொழி யோதி வழிபடின் நன்றாம் இடமகல் நம்நா டேற்றமும் எய்துமால்; |
| நாகனார் | : | தென்மொழி யிசைப்பின் தீங்கு வருங்கொல்? |
| கணியன் | : | நன்மொழி புகன்றீர்; நானது கருதேன் தேவ மொழியெனச் செப்பும் இதனைத் தேவர் உவப்பர் . . . . . . . |
| நாகணார் | : | . . . . . . . . திருமறை வல்லீர் ஒருமொழி தேவன் உவப்ப னாமெனில் அறிவிற் சிறந்தோர் அச்சொல் ஏலார்; பிறமொழி வெறுப்பன் இறைவன் என்ப தறமும் அன்றே; அறிவும் அன்றே சீனர் யவனர் சிங்களர் சாவகர் சோனகர் முதலோர் கோநகர் ஈண்டு வாணிகப் பொருட்டா வைகினர் ஈண்டி; |