பக்கம் எண் :

பாடுங்குயில்கள்203

தந்தை’ என்னும் பாராட்டைப் பெற்றார். இவர் உரைநடையின் தந்தை மட்டும் அல்லர்; புனைகதையின் தந்தையும் ஆவார். முதன்
முதலாகப் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்னும் புனைகதையைத் தமிழில் எழுதி வெளியிட்டார். இது நகைச்சுவை நிறைந்தது; உயர்ந்த கருத்துகளைக் கொண்டது; இலக்கிய வரிசையில் வைத்து எண்ணத்தக்கது, இவருடைய புனைகதை களைத் ‘தாய் படிக்க மகன் கேட்கலாம்; அண்ணன் படிக்கத் தங்கை கேட்கலாம்; தந்தை படிக்கத் தாய் கேட்கலாம்; குடும்பமே கலந்து படிக்கத்தக்க அவ்வளவு சிறப்புடையது’ என்று பன்மொழிப் புலவர் புகழ்வர். இவர் ‘சுகுணசுந்தரி சரித்திரம்’ என்னும் புனைகதை நூலும் எழுதியுள்ளார்.

வேதநாயகர், ‘நீதி நூல்,’ ‘சித்தாந்த சங்கிரகம்,’ ‘பெண்மதி மாலை,’ ‘திருவருள் அந்தாதி’ முதலிய சிறந்த செய்யுள் நூல்களும், ‘சர்வ சமய சமரசக் கீழ்த்தனை’ என்னும் இசைப்பாடல் நூலும் எழுதி வெளியிட்டார்

அக்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியிருந்தமையால் சட்டங்கள் ஆங்கில மொழியில் இருந்தன. அதனால் தமிழ் மக்கள் படும் இன்னல்களையெல்லாம் நீதிபதியாக இருந்த வேதநாயகர் நன்கு உணர்ந்திருந்தார். ‘ஒரு நீதிமன்றத்தில் கட்சிக்காரர்களும் தமிழராக இருந்து, வழக்குரைஞர்களும் நீதிபதிகளும் தமிழ் பேசக்கூடிய வர்களாக இருந்தால், வழக்கு ஏன் தமிழிலேயே நடத்தல்கூடாது?’ என்று இவர் அக் காலத்திலேயே உரிமைக் குரல் கொடுத்தார்.

‘ஆங்கில ஆட்சிமுறை மாறித் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி தலையெடுக்க வேண்டும்; அது தழைத் தோங்க வேண்டும்; அது சார்ந்து, நீதிமன்றங்களில் தமிழ் மொழியிலேயே சட்டத்திட்டங்களும் அமைக்கவேண்டும்; வழக்குரைஞர்களும், வாதிப் பிரரிதவாதிகளும் தமிழிலேயே எதையும் எடுத்துச் சொல்லவேண்டும். நாட்டில் சுதந்திர ஒளி வீச வேண்டும்’ என்று வேதநாயகர் பேசிய பேச்சி லிருந்து இவருடைய உள்ளம் தெள்ளிதின் விளங்குகின்றது.

இத்தகைய எண்ணங்கள் இவருடைய நெஞ்சத்தில் நிலைத் திருந்தமையாலும், நீதிபதியாகப் பணியாற்றி வந்தமையாலும் சட்டங்களை இவர் மொழிபெயர்க்க முயன்றார். நேரங் கிடைத்த போதெல்லாம் உயர்நீதி மன்றத்தின் சட்டங் களையும் தீர்ப்பு களையும் இவர் சிறிதுசிறிதாக மொழி பெயர்த்து வந்தார். கி.பி.1805ஆம் ஆண்டு முதல் கி.பி.1861ஆம் ஆண்டு முடிய உள்ள சட்டங்களை