யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இகும், சின், குரை, ஓரும், போலும், இருந்து, இட்டு, அன்று, ஆம், தாம், தான், கின்று, நின்று என்பனவாகிய இவ் விருபது இடைச்சொற்களும் தன்மை, முன்னிலை படர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் அசைநிலைப் பொருளில் வரும். எனவே, இவை எல்லா இடத்தும் வரும் அசைச்சொற்கள் எனப்படும். யா பன்னிருவர் மாணாக்கர்-யா இவளிவட் காண்டிகா-கா ஆயனை யல்ல பிற-பிற பிறக்கதனுட் செல்லான்-பிறக்கு இருங்குயி லாலுமரோ-அரோ பிரியின் வாழா தென்போ-போ விளிந்தன்று மாதவர்த் தெளிந்த-மாது கண்டிகு மல்லமோ கொண்க- இகும் ஈங்கா கியவா லென்றிசின்-சின் அதுபெறலருங் குரைத்தே-குரை அஞ்சுவ தோரு மறனே- ஓரும் வருந்தினை போலும்-போலும் நனவென் றெழுந்திருந்தேன்-இருந்து நெஞ்சம் பிளந்திட்டு- இட்டு அவன் சேவடி சேர்துமன்றே- அன்று பணியுமாம் என்றும் பெருமை- ஆம் நீர்தாம்-தாம் நீதான்-தான் வாழ்வான் ஆசைப்பட்டிருக்கின்றேன்-கின்று நின்றார் நிழலடைந்தே-நின்று ‘வாழ்வான் ஆசைப்பட்டிருக்கின்றேன்’ என்ற தொடரில் உள்ள, ‘ஆசைப்பட்டிருக்கின்றேன்’ என்பது, ‘ஆசைப்பட்டேன்’ என இறந்த காலப்பொருளில் வந்துள்ளது. எனவே, இங்கு உள்ள ‘கின்று’ என்பது நிகழ்கால இடைநிலை யன்று; அசைச் சொல்லாகும். இலக்கண விதி: யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இகும், சின், குரை, ஓரும், போலும், இருந்து, இட்டு, அன்று, ஆம், |