பக்கம் எண் :

50கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

தாம், தான், கின்று, நின்று என்னும் இவ் விருபது இடைச் சொற் களும் எல்லா இடங்களிலும் வரும் அசைச்சொற்களாம்.

யாகா பிறபிறக் கரோபோ மாதிகும்
சின்குரை ஓரும் போலும் இருந்திட்
டன்றாத் தாந்தான் கின்றுநின் றமைமொழி.

(ந-நூற்பா 441.)

10. பெயர்-வினை-இடை-உரிச்சொற்கள்

(1) பெயர்ச் சொல்

மரம்-பனை

அணி-முடி

இங்கு, ‘மரம்-பனை’ என்பன இடுகுறிப்பெயர்களாகும். மரம் என்றும் பனை என்றும் பெயர்கள் ஏற்பட்டதற்குரிய காரணங்கள் எதுவும் தெரியவில்லை. அவை, தொன்று தொட்டு இட்ட குறியாய் வழங்கி வருகின்றன. எனவே, ‘மரம், பனை’ என்பன இடுகுறிப் பெயர்களாகும்.

‘அணி-முடி’ என்பன காரணப் பெயர்களாகும். அணியப்படுதலின் ‘அணி ’ என்றும், முடியில் சூட்டப்படு தலின் ‘முடி’ என்றும் பெயர்
பெற்றன். எனவே, ‘அணி-முடி’ என்பன காரணப் பெயர் களாகும்.

இங்ஙனம், இடுகுறியும் காரணக் குறியுமாகிய, இடுகுறிப் பெயரும் காரணப் பெயரும் மரபினையும் ஆக்கப்பாட்டினை யும் தொடர்ந்து வரும். அங்ஙனம் வரும்பொழுது வினையால் அணையும் பெயர் மட்டும் காலங் காட்டும். மற்றவை காலங் காட்டா. எட்டு வேற்றுமைக்கும் இடமாகி, இருதிணை ஐம்பால் மூவிடத்து ஒன்றனை ஏற்பனவும் பலவற்றினை ஏற்பனவுமாகி வருவம். பொதுவாக இங்ஙனம் வருபவை எல்லாம் பெயர்ச் சொற்கள் எனப்படும்.

இனி, இங்ஙனம் வருகின்ற பெயர்ச் சொற்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

மா-தென்னை (இடுகுறி மரபுப் பெயர்கள்)
விலங்கு-பறவை (காரணக்குறி மரபுப் பெயர்கள்)