இட்ட குறியாக வழங்கும் ‘மா-தென்னை’ என்னும் இடுகுறிப் பெயர்கள், இடையே ஒருவரால் ஆக்கப்பட்டன அன்றி, மா மரத்திற்குரிய இயல்போடும், தென்னை மரத்திற்குரிய இயல் போடும் தோன்றிய பொருள்களுக்கெல்லாம், தொன்று தொட்டு மரபுபற்றி வருதலின் இடுகுறி மரபு தொடர்ந்த பெயர்களாகும். இடையே ஒருவரால் ஆக்கப்பட்டன அன்றி, குறுக்கே முதுகெலும்பை உடைய காரணத்தால் விலங்கு என்றும், பறக்கின்ற காரணத்தால் பறவை என்றும் பெயர் பெற்ற ‘விலங்கு-பறவை’ என்ற காரணப் பெயர்கள், குறுக்கே முதுகெலும்பை உடைய எல்லா வற்றிற்கும், பறக்கின்ற எல்லாவற்றிற்கும் தொன்றுதொட்டு மரபு பற்றி வருதலின், காரணக்குறி மரபு தொடர்ந்த பெயர்களாகும். “மானவேல் முட்டைக்கு மாறாய தெள்வர்போம் கானவேல் முட்டைக்கும் காடு.” என்ற, பொய்யாமொழிப் புலவர் பாடலில் வேட்டுக்கு மரன் தன்பெயர் முட்டை என்று கூறியது இடுகுறி ஆக்கம் ஆகும். பொன்னன் என்பது காரணக்குறி ஆக்கம் ஆகும். இங்கு, முட்டை என்ற இடுகுறிப்பெயரும், பொன்னன் என்ற காரணப்பெயரும், மரபுபோலத் தொன்றுதொட்டு வருதலின்றி இடையே ஒருவரால் ஆக்கப்பட்டு அப் பொருள்களுக்குப் பெயர் களாக வருவதால், அவை முறையே இடுகுறி ஆக்கமும், காரணக் குறி ஆக்கமும் தொடர்ந்த பெயர்களாகும். முட்டை என்ற இடுகுறிப் பெயரை, வேட்டுக் குமரன் தனக்குப் பெயராக ஆக்கிக் கொண்டமையால், அஃது இடுகுறி ஆக்கம் ஆயிற்று. பொன்னை உடைய காரணத்தால் வரும் பொன்னன் என்ற காரணப் பெயரை, ஒருவன் தனக்குப் பெயராக ஆக்கிக் கொண் டால், அப்பெயர் காரணக்குறி ஆக்கம் ஆகும். நடந்தவனைக் கண்டேன் இங்க, நடந்தவன் என்ற வினையால் அணையும் பெயர், வினையால் அணையும் காரணக்குறியாகும். அஃதாவது, நடத்த லாகிய வினை காரணமாக, அஃது அத் தொழிலைச் செய்த வனுக்குப் பெயராக வந்துள்ளது. |