பக்கம் எண் :

52கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

நடந்தவனை-(இறந்தகாலம்)
நடக்கின்றவனை-(நிகழ்காலம்)
நடப்பவனை- (எதிர்காலம்)

இங்ஙனம், பெயர்ச் சொற்களிலே வினையால் அணையும் பெயர் மட்டும் காலங் காட்டும். மற்றவை காட்டா.

(பெயர்ச்சொல் வேற்றுமைக்கு இடனாதல்)

முருகன் வந்தான் - முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை)
முருகனைக் கண்டேன் - இரண்டாம் வேற்றுமை (ஐ)
முருகனால் கட்டப்பட்டது-மூன்றாம் வேற்றுமை (ஆல்)
முருகனுக்கக் கொடுத்தேன் - நான்காம் வேற்றுமை (கு)
முருகனின் மூப்பு யான் - ஐந்தாம் நாம் வேற்றுமை (இன்)
முருகனது கை - ஆறாம் வேற்றுமை (அது)
முருகனின் கண் இருக்கின்ற பேனா - ஏழாம் வேற்றுமை (கண்)
முருகா வா-எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை)

இங்கு, முருகன் என்ற பெயர்ச்சொல் எட்டு வேற்றுமைப் பொருள்களுக்கும் இடமாகியது போலப் பிற பெயர்ச்சொற்கள் எல்லாம், எட்டு வேற்றுமைப் பொருள்களுக்கும் இடமாகி வரும்.

இனி, இருதிணை ஐம்பால் மூவிடத்து ஒன்றணை ஏற்பனவும், பலவற்றினை ஏற்பனவுமாகிய பெயர்களைப் பற்றிப் பார்ப்போம்.

உயர்திணை ஆண் - பெண் - பலர்பாற் பெயர்கள்

(பொருளால் வருபெயர்கள்)

தமன்-நமன்-நுமன்-எமன்-(ஆண்பால்)
தமள்-நமள்-நுமள்-எமள்-(பெண்பால்)
தமர்-நமர்-நுமர்-எமர்-(பலர்பால்)

இவையும், இவை போல்வனவுமாகி கிளை, எண் முதலியன பற்றிய பெயர்கள் எல்லாம், உயர்திணை ஆண் - பெண் - பலர்பால்களில், பொருளால் வருபெயர்களாகும்.

(இடத்தால் வருபெயர்கள்)