வெற்பன் - எயினன்- ஆயன் மகிழ்நன் - துறைவன் - கருவூரான்- (ஆண்பால்) குறத்தி - எயிற்றி - ஆய்ச்சி உழத்தி - பரத்தி - கருவூராள்- (பெண்பால்) குறவர் - எயினர் - ஆயர் உழவர் - பரதவர் - கருவூரார் - (பலர்பால்) இவையும், இவை போல்வனவுமாகிய திணை, ஊர் முதலியன பற்றிய பெயர்கள் எல்லாம், உயர்திணை ஆண்-பெண்-பலர் பால்களில், இடத்தால் வருபெயர்களாகும். (காலத்தால் வருபெயர்கள்) மூவாட்டையான் - வேனிலான் - ஆதிரையான் -(ஆண்பால்) மூவாட்டையாள் - வேனிலாள் - ஆதிரையாள் - (பெண்பால்) மூவாட்டையார் - வேனிலார் - ஆதிரையார் - (பலர்பால்) இவையும், இவை போல்வனவுமாகிய ஆண்டு, பருவம், மாதம், நாண்மீன் முதலியன பற்றிய பெயர்கள் எல்லாம், உயர்திணை ஆண்-பெண்-பலர்பால்களில், காலத்தால் வருபெயர் களாகும். (சினையால் வருபெயர்கள்) குழைக்காதன் - நெடுங்கையன் - (ஆண்பால்) குழைக்காதாள் - நெடுங்கையாள் - (பெண்பால்) குழைக்காதர் - நெடுங்காதர் - (பலர்பால்) இவையும், இவை போல்வனவுமாகிய தோள், குழல், மார்பு, கண், காது, கை முதலிய உறப்புக்கள் பற்றிய பெயர்கள் எல்லாம், உயர்திணை ஆண் - பெண் - பலர்பாலில், சினையால் வருபெயர்களாகும். (குணத்தால் வருபெயர்கள்) பெரியன் - கரியன் - கூனன் - (ஆண்பால்) பெரியள் - கரியள் - கூனி - (பெண்பால்) பெரியர் - கரியர் - கூனர் - (பலர்பால்) |