பக்கம் எண் :

54கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

இவையும், இவை போல்வனவுமாகிய அளவு, அறிவு, ஒப்பு, வடிவு, நிறம், கதி, சாதி, குடி, சிறப்பு முதலியன பற்றிய பெயர்கள் எல்லாம், உயர்திணை ஆண் - பெண் - பலர்பாலில், குணத்தால் வருபெயர்களாகும்.

(தொழிலால் வருபெயர்கள்)

ஓதுவான் - ஈவான் - (ஆண்பால்)
ஓதுவாள் - ஈவாள் - (பெண்பால்)
ஓதுவார் - ஈவார் - (பலர்பால்)

இங்ஙனம், ஓதல், ஈதல் முதலியன பற்றிய பெயர்கள் எல்லாம், உயர்திணை ஆண் - பெண் - பலர்பாலில், தொழிலால் வருபெயர்களாகும்.

இவை அனைத்தும் பொருளாதி ஆறன் அடியாகப் பிறந்த, இரு
திணையில் உயர்திணையையும், ஐம்பால்களில் ஆண்பால், பெண்
பால், பலர்பால்களையும் தனித்தனியே ஏற்று நின்ற பெயர் களாகும்.

இவை தவிர, உயர்திணை ஆண்-பெண்-பலர்பாற் பெயர்களாக வருவனவும் உள.

அஃறிணை ஒன்றன்பாற் பெயர்கள்

எது-ஏது-யாது }துவ்விகுதி வினாப் பெயர்கள்

அது-இது-உது }துவ்விகுதி சுட்டுப் யெர்கள்

குழையது - (பொருள்)
நிலத்தது - (இடம்)
மூலத்தது - (காலம்)துவ்விகுதி பெற்ற
கோட்டது - (சினை)பொருளாதி அறுபெயர்கள்
குறியது - (குணம்)
ஆடலது - (தொழில்)

அஃது
இஃது சுட்டுடன் கூடிய ஆய்தம் பொருந்திய
உஃது துவ்விகுதிப் பெயர்கள்

ஒன்று எண்ணாகு பெயர்