பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்59

நீ நம்பி
நீ நங்கைமுன்னிலை ஒருமைப் பெயர்
நீ பூதம்

நீர் மக்கள்
நீர் பூதங்கள்
எல்லீர் மக்கள்
எல்லீர் பூதங்கள் நீர், எல்லீர், நீயிர், நீவிர் என்ற
நீயிர் மக்கள்முன்னிலைப் பன்மைப் பெயர்கள்
நீயிர் பூதங்கள்
நீவிர் மக்கள்
நீவிர் பூதங்கள்

நீ, நீர், எல்லீர், நீயிர், நீவிர் என்ற முன்னிலைப் பன்மைப் பெயர்கள் ஐந்தும் இருதிணைப் பொதுவாயின.

அவர் எல்லாம்
அவை எல்லாம்எல்லாம்

அவர் தாம்
அவைதாம்தாம்

அவன்றான்
அவடான்தான்
அதுதான்

எல்லாம், தாம், தான் என்பன இருதிணைக்கும் பொதுவாயின.

இதுவரை, இருதிணைக்கும் பொதுவாக வரும் பெயர்ச் சொற்களைப் பற்றிப் பார்த்தோம். இனி, மூவிடப் பெயர்களையும், மூவிடப் பொதுப்பெயரையும் பார்ப்போம்.

மூவிடப் பெயர்கள்

‘யான்-நான்-யாம்-நாம்’ இவை நான்கும் தன்மை இடத்திற் குரிய ஒருமை-பன்மைப் பெயர்களாகும்.