பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்319

போரிட்டு மாண்ட வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளியை முடித்தலைக் கோவுக்கு அடுத்த தலைமுறையினனாகக் கொள்ளலாம்.

இந்த முறையில் நாம் மேலே கண்ட காலநிரல் அமைவதைக் காணலாம். இனி இவர்களது வரலாறுகளைத் தனித்தனியே நோக்குவோம்.

பெருநற்கிள்ளி - 1

சோழ மன்னருள் காலத்தால் மிகவும் முற்பட்டவனாகத் தோன்று கிறான். உறையூரை ஆண்ட முதல் சோழ அரசனாக இவன் விளங்கினான்.

போர்கள்

ஆமூர், முக்காவல் நாட்டின் தலைநகர். இந்த ஊரில் ஆமூர் அரசன் மல்லனுக்கும், போர்வை அரசன் (கோ) பெருநற்கிள்ளிக்கும் போர் நடந்தது.

இந்தப் போரில் சோழன் மல்லனைத் தாக்கினான்; மல்லனது ஊரிலேயே தாக்கினான். சோழன் போரிட்ட காட்சி கண்ணுக்குப் பெரு விருந்தாய் அமைந்திருந்தது. பசியால் பனைமரத்தை முரிக்கும் யானை போல அவன் போரிட்டான். ஒடியும் பனை மரம்போல் மல்லனது படை இரு பகுதியாகச் சிதைந்தது. சிதைந்தபடை பின்புறமும் வளைத்துக் கொண்டு சோழனைத் தாக்கியது. சோழன் மண்டியிட்டுக்கொண்டு முன்னும் பின்னும் திரும்பித் தாக்கிப் போரிட்டான்; பகைவர்களைக் கொன்று குவித்தான். இது ஆமூரில் நடந்த போர்.1

போர்வை அரசன் பெருநற்கிள்ளி மற்றொரு போரில் ஈடுபட்டான். அந்தப் போர் ஊரைக் கைப்பற்ற வந்த பொருநனோடு நடத்திய போர்.2 ஊரைக் கைப்பற்ற வந்த பொருநன் யார்? எந்த ஊரைக் கைப்பற்ற வந்தான்? எங்குப் போர் நடைபெற்றது என்பதைத் தெளிவாக உணர்த்தக்கூடிய சான்று இல்லை. இந்தப் போர் ஆமூரில் நடைபெற வில்லை என்பது மட்டும் உறுதி. ஆமூர் இந்தச் சோழனின் நாடு அன்றாகையால் இந்த உறுதி பெறப்படுகிறது.

பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் இவன் நிகழ்த்திய போர் ஒன்றைக் கண்டு பாடியுள்ளார். தம் இல்லத்தில் இருந்து


1. புறம். 80 2. ௸ 82