| 318 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |

சேர அரசர்களான அந்துவஞ்சேரலும், மாந்தரஞ்சேரலும் முறையே காலத்தால் முந்தியவரும் பிந்தியவரும் ஆவர் என்பது அவரது வரலாறுகளினால் தெரிகிறது. எனவே, அவர்களோடு தொடர்புடைய பெருநற்கிள்ளிகளான முடித்தலைக் கோவும், இராசசூயம் வேட்டவனும் முறையே காலத்தால் முற்பட்டவனும் பிற்பட்டவனும் ஆவர். எஞ்சியுள்ள இருவரில் போர்வைக்கோ, தித்தன் காலத்தவன் என்பது தெளிவாகத் தெரியும் சான்று. ஆதலால், முடித்தலைக்கோ மேற்கண்ட தித்தனின் மகனான வெளியனிடமிருந்து நாட்டைக் கைப்பற்றினான் என்பது நாம் முன்பு கூறியதுபோல் உய்த்துணரக் கிடப்பதாலும், போர்வைக் கோவை, முடித்தலைக் கோவிற்கு முந்தியவன் என்று கொள்கிறோம். எஞ்சியுள்ளவன் வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி. இவன் நெடுஞ்சேரலாதனோடு போரிட்டு மாண்டவன். சேர அரசர்களான அந்துவனும் உதியனும் சம காலத்தவர் ஆதலால், உதியனின் மகனான நெடுஞ்சேரலாதனோடு |