பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு267

வேள் ஆவிக் கோமான் பதுமன்

குடக்கோ நெடுஞ் சேரலாதன் (2-ம் பத்தின் தலைவன்)=தேவி (மூத்த மகள்) (இளையமகள் )=செல்வக்கடுங்கோதேவி வாழியாதன் (7-ம் பத்தின் தலைவன்)
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் (4-ம் பத்தின் தலைவன்)ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (6-ம் பத்தின் தலைவன்)பெரும்சேரல் இரும்பொறை (8-ம் பத்தின் தலைவன்)குட்டுவன் இரும்பொறை

இவ்வாறு, வேள் ஆவிக் கோமான் பதுமனுடைய இரண்டு பெண் களுக்கு நான்கு அரசகுமாரர்கள் பிறந்தனர். ஆனால், பதுமனுடைய மூத்த மகளை மணஞ் செய்திருந்த குடக்கோ நெடுஞ்சேரலாதன் இன்னொரு மனைவியையும் மணஞ் செய்திருந்தான். அந்த மனைவி சோழஅரசன் மகளான நற்கோணை என்பவள். நற்சோணைக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். ஆகவே, குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கு இரண்டு மனைவியரிடத்திலும் நான்கு பிள்ளைகள் பிறந்தனர். நற் சோணைக்குப் பிறந்த மக்கள், தமிழக வரலாற்றில் புகழ் பெற்றவனான செங்குட்டுவனும் தமிழில் ஆதிகாவியத்தை இயற்றிப் புகழ் பெற்றவரான இளங்கோவடிகளும் ஆவர். குடக்கோ நெடுஞ் சேரலாத னுடைய வழிமுறையைக் கீழே காண்க.

குடக்கோ

=நெடுஞ்சேரலாதன் (2--ம் பத்தின் தலைவன்) =சோழன் மகள் நற்சோளை
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் (4-ம் பத்தின் தலைவன்)ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (6-ம் பத்தின் தலைவன்)கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் (5- ம் பத்தின் தலைவன்)
இளங்கோ வேந்தன் (இளங்கோவடிகள்)