பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 43 |
தரை வாணிகம் அயல்நாடுகளுக்குத் தரை வழியாகச் சென்று வாணிகஞ் செய்த சாத்தர் கழுதைகள், எருதுகள், வண்டிகள் ஆகியவற்றில் வாணிகப் பொருள்களை ஏற்றிக் கொண்டு கூட்டமாகச் சென் றார்கள். அவர்கள் போகிற வழிகளில், மனித வாசம் இல்லாத பாலை நிலங்களில் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் வந்து கொள்ளையடித்தார்கள். அவர்களை அடித்து ஓட்டுவதற்காக வாணிகச் சாத்தர் தங்களோடு வில் வீரர்களையும் அழைத்துக் கொண்டு போனார்கள். தமிழ்நாட்டில் மட்டும் அன்று; இந்தியா தேசம் முழுவதுமே அக்காலத்தில் வழிப்பறிக் கொள்ளை செய்த வேடர்கள் இருந்தார்கள். ஆகையினாலே வாணிகச் சாத்தர் அயல்நாடுகளுக்கு வாணிகஞ் செய்யப் போகும்போது கூட்ட மாகச் சேர்ந்து போனதுமல்லாமல் தங்களோடு படைவீரர்களை யும் அழைத்துக் கொண்டு போனார்கள். வாணிகர் சாத்தை வேடர்கள் கொள்ளையடித்ததைச் சங்க நூல்கள் கூறுகின்றன. மருதன் இளநாதனார், பாலை நிலத்தின் வழியே சென்ற வாணிகச் சாத்தைக் கொள்ளையிட்ட வேடரைக் கூறுகிறார். ‘மழைபெயல் மறந்த கழைதிரங்கு இயவில் செல்சாத்து எறியும் பண்பில் வாழ்க்கை வல்வில் இளையர்.’ (அகம், 245: 5-7) கடியலூர் உருத்திரங் கண்ணனாரும், வழிப்பறிக் கொள்ளை யிட்ட வில் வேடரைக் கூறுகிறார். ‘சாத்தெறிந்து அதர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக் கொடுவில் ஆடவர்’ (அகம், 167: 7-9) பலாப் பழம் அளவாகக் கட்டின மிரியல் (மிளகு) மூட்டைகளைக் கழுதைகளின் முதுகின் மேல் ஏற்றிக்கொண்டு வாணிகச் சாத்தர் தங்களுடைய வில் வீரர்களோடு சென்றனர். ஆங்காங்கே வழியில் இருந்த சுங்கச் சாவடிகளில் அரசனுடைய அலுவலர்கள் அவர்களிடமிருந்து சுங்கம் வாங்கினார்கள். இதைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுகிறார். ‘சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடைக் கருவி லோச்சிய கண்ணகன் ஏறுழ்த்தோள் |