பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 55

சாசனச் செய்யுள்

இனவ . . கம்புரி வெண்பிறைக் கோட்டிகல் வெங்கடுங்கட்
சின மதத்த வெங்கரிச் சுந்தரத் தென்னவன் தில்லைமன்றில்
வனசத் திருவுடன் செஞ்சொற் றிருவை மணந்ததொக்கும்
கனகத் துலையுடன் முத்தத் துலையிற் கலந்ததுவே.

குறிப்பு :-சுந்தரத் தென்னவன் - சடாவர்மன் சுந்தர பாண்டியன் ஐ. இவன் கி.பி. 1251-1271 வரையில் அரசாண்டான். சிதம்பரக் கோவிலின் மேற்குக் கோபுரத்தை அமைந்தவன் இவன். வனசத் திரு - செந்தாமரையில் உள்ள திருமகள். செஞ்சொற்றிரு சொல்லின் செல்வியாகிய கலைமகள்.

சோழகுலவல்லி

இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் . நடராசர் கோவில் கிழக்குக் கோபுர வாயிலுக்குள் வலதுபுறச் சுவரில் உள்ளது.

பதிப்பு : எண் 621. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு. (No.621. S.I.I. Vol. IV.)

விளக்கம் : திருமூலத்தானமுடையான் என்பவர் இச் செய்யுட்களை இயற்றினார்.

சாசனச் செய்யுள்

ஓதுஞ் சகரர் யாண்டோ ரொருபத்தெட்டில்
மேலாதி மூலநாளி லானிதனில் - சோதி
துளங்கிலமேல் சோழன் சோழகுல வல்லி
களங்கமற வைத்தான் கரு. 1

வண்ணந் திகழுங் கொடியாட மன்னுஞ் சோழ குலவல்லி
நண்ணுந் தலைமை யுடையாரை நாமார் புகழப் பாமாலை
யெண்ணும் படியில் புகழாளர் என்றே யன்றே யென்னுடைய
கண்ணும் பழனக் கழுமலமுங் கலந்தார்த் திருவ மலந்தாரேல்.