பக்கம் எண் :

60மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

மழிவுகண்டான் சேரன் அளப்பரிய ஆற்றற்
கிழிவுகண்டான் தொண்டையர்கோ னுற்று.    15

தில்லைப் பெரிய திருச்சுற்று மாளிகை
எல்லைக் குரைவரைபோ லீண்டமைத்தான் - தொல்லைநீர்
மண்மகளைக் கங்கோன் மதிக்குடைக்கீழ் வீற்றிருத்தி
உண்மகுழும் தொண்டையர்கோ னுற்று.    16

புட்கரணி கல்சாத்து வித்தான்பொற் கோயிலின்வாய்
விக்கரணம் பார்ப்படந்ததன் மேல்விதித்து - திக்களவு
மாநடத்திக் கோல்நடத்தும் வாள்கூத்தன் மண்ணில்லறம்
தாநடத்தில் நீடுவித்தான் தான்.    17

வீதிசூழ் நல்விளக்கும் வீற்றிருக்க மண்டபமும்
மாதுசூழ் பாதமும் மகுழ்ந்தார்க்குப் - போதுசூழ்
தில்லைக்கே செய்தான் திசைகளிறு போய்நிற்கும்
எல்லைக்கே செல்கலிங்க ரேறு.    18

நடங்கவின்கொ ளம்பலத்து நாயகச் செந்தேனின்
னிடங்கவின்கொள் பச்சையிளந் தேனுக் - கடங்கார்
கருமாளி கைய்மேல் பகடுதைத்த கூத்தன்
திருமாளிகை யமைத்தான் சென்று.    19

எவ்வுலகும் எவ்வுயுரு மீன்று மெழிலழியாச்
செவ்வியாள் கோயில் திருச்சுற்றைப் - பவ்வஞ்சூழ்
எல்லைவட்டன் தங்கோற் கியல்விட்ட வாட்கூத்தன்
தில்லைவட்டத்தே யமைத்தான் சென்று.    20

வாளுடைய பொற்பொதுவின்மன் நடந்தன னடமாடும்
ஆளுடைய பாவைக் கவிஷேகம் - வேளுடைய
பொற்பினான் பொன்னம்பலக் கூத்தன் பொங்குசட
வெற்பினாற் சாத்தினான் வேறு.    21

சேதாம்பன் வாயுமைக்குந் தில்லையந் தேவிக்கும்
பீதாம்பரஞ் சமைத்தான் பேரொலிநீர் - மோதா
வலைகின்ற வெல்லை யபயனுக்கே யாக
மலைகின்ற தொண்டையார் மன்.    22