பக்கம் எண் :

62மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

மறைமுடிப்பார் வீதி மடஞ்சமைத்தான் மண்ணோர்
குறைமுடிப்பார் தொண்டையர் கோ.    30

என்றும் பெறுதலால் ஏறாவிழிற் புலியூர்
மன்றி னடனுக்கு மாமத்தக் - குன்று
குடுத்தருளி மண்ணிற் கொடுங்கலி வாராமே
தடுத்தான் தொண்டையர்கோன் றான்.    31

முத்திறத்தா ரீசன் முதற்றிறத்தைப் பாடியவர்
ஒக்கமைத்த செப்பேட்டி னுள்ளினெழு - தித்தலத்தி
லெல்லைக் கிரிவா யிசை யெழுதினான் கூத்தன்
தில்லைச் சிற்றம்பலத்தே சென்று.    32

தில்லை வளரும் தெளிதே னொளிதழைப்ப
நல்ல திருநந்தா வனஞ்சமைத்த - வில்லத்திருக்
கோட்டங்கொள் வாழ்வேந்தர் கொற்றக் களியானை
யீட்டங்கொள் காலிங்க ரேறு.    33

நூறாயிர முகமாங் கமைத்தான் னோன்சினத்தி
பாறாக வெல்களிற்று வாட்கூத்தன் - கூறாளும்
வல்லிச் சிறுகடைக்குக் கான்வளர் நாடஞ்செய்
தில்லைச் சிற்றம்பலத்தே சென்று.    34

மாசிக் கடலாடி வீற்றிருக்க மண்டபமும்
மாசற்ற வற்றைப் பெருவழியும் - ஈசற்குத்
தென்புலியூர்க்கே யமைத்தான் கூத்தன் திசையனைத்து
மன்புலி யாணை நடக்கறை யத்து.    35

ஓங்கியபொன் னம்பலத்தார்க் கோராயிரஞ் சுரவி
ஆங்கிளத்தா னேற்றெதிர்ந்தா ராழிழையார் - தாங்கா
தொக்கி உடலாவி யுயிர்நாட் போக்கி
இருக்கின்ற தொண்டைய ரேறு.    36

தொல்லோர் வாழ்தில்லைச் சுடலையமர்ந்தார் கோயில்
கல்லால் எடுத்தமைத்தான் காசினியிற் - பொலன்
மறைவளர்க்க வெங்கலியை மாற்றி வழுவாம
லறம்வளர்க்கக் காலிங்க னாய்ந்து.    37