பக்கம் எண் :

68மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

சரித்திரப்புகழ் படைத்த இந்தக் கல் இப்போது சிதம்பரத் திருக்கோவிலில் இருக்கிறதா? புதுக்கப்பட்டபோது இந்தக் கல் தவறிப் போய்விட்டதா? இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து இக் கல்லைக் கண்டெடுக்க வேண்டுவது அறிஞர் கடமையாகும்.

கம்பன் மூவேந்த வேளான்

இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகா, கீழுர். இவ்வூர் வீரட்டானேசுவரர் கோவிலின் திருவுண்ணாழி கையின், தெற்கு - கிழக்கு - வடக்குப் புறச் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது.

பதிப்பு : எண் 863. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு. (No.863. S.I.I. Vol. VII.)

விளக்கம் : இந்த அழகான அகவற்பா, முதலாம் இராசராச சோழன் காலத்தில் எழுதப்பட்டது. இந்தச் சோழனிடம் அதிகாரியா யிருந்த கம்பன் மூவேந்த வேளான் என்பவர். வீரட்டானேசுவரர் கோவிலில் செய்த தானதருமங்களைக் கூறுகிறது. இந்தக் கம்பன் மூவேந்த வேளானை அம்பர்நாடன், ஆலங்குடிக் கோன், திரைமூர் நாடன், மணற்குடி நாடன் என்று இச்செய்யுட்கள் கூறுகின்றன.

இந்த அகவற்பாவின் இடையிடையே சில எழுத்துக்கள் மறைந்து விட்டன.

சாசனச் செய்யுள்

. . . . . . . . . . . . . . . .
ஜயஜய வென்று மொழி
பன்னிய வாய்மையிற் பணியப் பொன்னியல்
விசும்பரிற் கதமும் பசும்புரி வெள்ளுளை

5 நெடுஞ்சுவற் றெடுத்த குறுந்துனைப் படுங்க
னள்ளுறப் பொன்ஞான் வள்ளுற வச்சத்
தனிக்கா லரசு மனக்காற் கங்குற்
குழம்புபடு பேரிருட் பிழம்புபட வுருட்டிய
செஞ்சுடர் மௌலி வெஞ்சுடர் வானவன்