10 | வழிமுதல் வந்த மஹிபதி வழிமுத லதிபதி நரபதி அஸ்வபதி ....ட கஜபதி கடலிடங் காவலன் மதிமுதல் வழுதியர் வரைபுக மற்றவர் தேவிய ரழுதுய ரழுங்கலி லழுங்கப் பொழுதியல் |
15 | வஞ்சியிற் காஞ்சி வகுத்த செஞ்சிலைக் கலிங்கன் கனb. . கப்பா ...வங்கன் அம்மை . . . . . . . . . . . . . . .ட் புதுமலர் வாகை புனைந்து நொதுமலர் கங்க பாடி கவ்விக் கொங்கம் |
20 | வெளிப்படுத் தருளி யளிபடுத் தருளிய சாரல் மலையட்டுஞ் சேரன் மலைஞாட்டுத் தாவடிக் குவட்டின் பாவடிச் சுவட்டுத் துடர்நெய்க் கனகந் துகளெழ நெடுநற் கோபுரங் கோவை குலைய மாபெரும் |
25 | புரிசை வட்டம் பொடிபடப் புரிசைச் சுதைகவின் படைத்த சூளிகை மாளிகை யுதைகை முன்னொள்ளெரி கொளுவி உதகை வேந்தைக் கடல்புக வெகுண்டுபோந்து சூழமண் டலந்தொழ வீழமண் டலமுங்கொண்டு |
30 | தண்டருளிப் பண்டு தங்கடிருக் குலத்தோர் தடவரை எழுதிய பொங்குபுலிப் போத்துப் புதுக்கத் துங்கத் திக்கினிற் சேனை செலுத்தி மிக்க வொற்றை வெண்குடைக்கீ ழிரட்டை வெண்கவரி தெற்றிய வனலந் |
35 | திவள வெற்றியுள் வெற்றிருந் தருளிய வேந்தன் போற்றிருந் தண்டமிழ் நாடன் சண்ட பராக்கிரமன் றிண்டிரற் கண்டன் செம்பியர் பெருமான் செந்திரு மடந்தைமன் ஸ்ரீராஜ ராஜ னிந்திர சமனான் |
40 | ராஜசர் வஞ்ஞனெனும் புலியைப் பயந்த பொன்மான் கலியைக் கரந்து கரவாக் காரிகை சுரந்த முலைமிகப் பிரிந்து |