பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 71

75 கனல்புகுங் கபிலக் கல்லது புனல்வளர்
பேரெட் டான வீரட் டான
மனைத்தினு மனாதி யாயது நினைப்பினு
முணர்தற் கரியது யோகிக ளுள்ளது
புணர்தற் கினியது பொய்கைக் கரையது
80 சந்தன வனத்தது சண்பகக் கானது
நந்தன வனத்தி னடுவது பந்தற்
சுரும்படை வெண்பூங் கரும்பிடை துணித்தரத்
தாட்டொலி யாலை யயலது பாட்டொலிக்
கருங்கைக் கடையர் பெருங்கைக் கடைவாள்
85 பசுந்தாட் டீயுஞ் செந்நெற் பழனத்
தசும்பார் கணி. . . . . . . . . .
யவற்றை யருக்க னரிச்சனை முற்றிய
நான்மறை தெரிந்து நூன்முறை யுணர்ந்தாங்
கருச்சனா விதியொடு தெரிச்சவா கமத்தொழில்
90 மூவெண் பெயருடைய முப்புரி நூலோர்
பிரியாத் தன்மைப் பெருந்திரு வுருடையது
பாடகச் சீறடிப் பணிமுலைப் பாவையர்
நாடகத் துழதி நவின்றது சேடகச்
சண்டையுங் கண்டையுந் தாளமுங் காளமுங்
95 கொண்டதிர்ப் படகமுங் குளிறுமத் தளங்களுங்
கரடிகைத் தொகுதியுங் கைம்மணிப் பகுதியு
முருடியல் திமிலை முழக்கமும் மருடரு
வால்வளைத் துணையு மேல்வளைத் தணையுங்
கருப்பொலி மேகமுங் கடலுமெனக் கஞலி
100திருப்பொலி திருப்பலி சிநத்து விருப்பொலிப்
பத்தர்தம் பாடல் பயின்றது முத்தமிழ்
நாவலர் நாற்கவி நவின்றது ஏவலி
லருஷையோ டரஹர வெனக்குனித் தடிமைசெய்
பருஷையர் பகுவிதம் பயின்றது கருக்ஷை
105 முக்கண்ணவ னுறைவது கடவுளர் நிறைவது
மண்ணவர் தொழுவது வானவர் மகுழ்வது
மற்று மின்ன வளங்கொள் மதிற்பதாகைத்