| தெற்றுங் கொழுநிழற் சிவபுரத் தரற்குப் பன்னா ணிலைபெற முந்நா ளுரவோன் |
110 | செய்த தானந் தேவன் குடியி லலகியல் மரபி னமைந்து உலகியல் சாண்பன் னிரண்டிற் சமைந்த தனிக்கோல் போற்றுற வளந்த நூற்றறு பதுகுழி மாவொன் றாக வந்த வேலி |
115 | யாறே காலி லந்தங் களைந்து நீங்கிய நிலத்தா னீங்கா நெற்றுகை ஆங்கொரு மாவிற் கறுகல மாகக் கொழுநூற் றவராடுங் கூட்டி யளந்த எழுநூற் றிருபதி லிறைமகற் குரிமை< |
120 | நாழி யெட்டான் வாழியட் டானக் கருங்கா லொன்றாற் செங்கை யிரண்டிட் டளந்த நெல்லா லறுபதனிற் களைந்த நிவந்தத் தன்மை நினையி லுவந்து நஞ்சுண் டவருக் கமுதுண நயந்த |
125 | வொத்தெண் வழுவாப் பத்தெண் குத்தல் பழநெல் லரிசி பன்னிரு நாழிக்கு பதினை யிரட்டிநெற் பதினை யிரட்டியுங் குறுவா ளான நெடுவா ணயனிக் கோரிரு நாழியுள்ப் படுத்து யர்ந்தநெல் |
130 | நாலெட் டான நாழியும் மெ ..... . . . . . . . . மிளகுமுப் பிடிக்கு செல்லக் குடுத்த நெல்லஞ் ஞாழியுஞ் சூழ்கறி துவன்ற பொழ்கற் கொள்நெற் பெருக்கிய நாலுரி யுருக்கிய நறுநெ |
135 | யுழக்கரை தனக்கு வழக்கரை வினவில் முந்நா ழியுந்தயிர் முந்நாழிக் காங்கறு நானா ழியுமடைக் காய மிதிற்குப் பன்னீ ருழக்கும் பரிசா ரகமா ணன்னான் கினுக்கு நெல்லறு நாழியுந் |