பக்கம் எண் :

74மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

  யம்பளத் திரண்டும் பாவருங் கணியக்
கழனியி லெட்டுங் கைகலந் துரைப்பிற்
175 றுழனி . . . . . . . . கலமென
மேற்படி காலாற் பாற்பட வளந்த
வீங்குட னவர் பாங்குடன் றொகுத்த
மெஞ்ஞூற் றிரைகயில் மேதக தூநெ
லஞ்ஞூற் றிருபத் திருகலம் என
180 மற்றைத் தொகையில் மதிவளர் சடையோன்
பெற்ற வாரம் பிழையறப் பேசி
லைம்பதிற் றைஞ்சொடு மொய்ம்புறு பதினொரு
கலத்தொடு முணங்கல் பூண்டியிற் கறைஞெல்
நஞ்சை ஞீக்கிப் புஞ்சை நான்மா
185 மாத்தாற் கலவரை யான வரையறை
அறுகல மேற்றிப் பெறுகல வளவை
மூன்றொடு முப்பது குறைந்த முன்னூற்றுக்
கலத்தினில் மற்றக் கண்ணுதற் காக
நிலத்தவ ருவந்த நிவந்தந் நலத்தகு
190 நாளொன் றினுக்கு நான்முன் னாழி
பானிறத் தன்மைத் தூநிறக் குத்த
லரிசியி லான நெல்லு வரிசையிற்
குறுபவள் கூலி யெற்றிப் பெறுவன
பேணிய பழநெற் றூணியுங் காணிய
195 வையமிது புகழு நெய்யமுது முப்பிடி
கொள்ளக் கொடுத்த நெல்லறு நாழியும்
பொழுது மூன்றினுக் கிழுதுபடு செந்தயி
ரொருமுன் னாழிக் கிருமுன் னாழியு
யடைக்கா யமுதுக் காறுரி யத்து
200 மந்தண னொருவ னபிஷேகஞ் செய்யத்
தந்தன குறுமணிமுற் றதைந்த நாழியு
மறையேவல் செய் மாணிரண் டினுக்குக்
குறைவறக் குடுத்த நெற்குறுணி ஞானாழியு
மோராண் டினுக்கு நேராண்டாக