பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 75

205 நண்ணிய நக்ஷத் திரமென னல்லோ
னண்ணிய திருவிளக் கெண்பதுங் கண்ணெனக்
காவியர் கயல்பயி லாவியூ ரதனிற்
றிக்குடை யிவரு முக்குடை யவர்தம்
அறப்புற மான திறப்பட நீக்கிச்
210 சாலி விளைஞிலம் வேலி யாக்கி
முதல்வதின் மூன்றே முக்காலே யரைக்கா
லிதன்த னிவந்த மியல்வகை யுரைப்பில்
ஒப்பத் திருவனை யவர்முப்பத் திருவர்
பாடல் பயின்ற நாடக மகளிர்க்கும்
215 நெஞ்சா சார நிறைவொடு குறையாப்
பஞ்சா சாரியப் புகுதி யோர்க்கும்
நறைப்புது மலர்விரி நந்தவான
மிறைப்புத் தொழில்புரிந்த விருந்தவத் தோற்கும்
யோகி யொருவனுக்கு நியோக முடைநில
220 . . . . . . . . . . . . வாழியர்
செஞ்சடைக் கடவுடன் றிருவாக் கேழ்வித்
தஞ்சடைக் கடிகையன் றனக்கும் நெஞ்சில்
விதித்த முறைமை மதித்து நோக்கி
யின்னவை பிறவு மாராஜ ராஜன்
225 றன்னவை முன்னற் றத்துவ நெறியி
லறங்கள் யாவையு மிறங்கா வண்ணம்
விஞ்ஞா பனத்தால் மிகவெளிப் படுத்தோன்
அன்பது வேலியி லடைக்குன் றகர்க்கு
மொன்பது வேலி யுடைய வுரவோன்
230 கொம்பர் நாடுங் குளிர்மலர்ச் சோலை
யம்பர் நாடன் ஆலங்குடிக் கோன்
தெண்டிரைப் பழனத் திரைமூர் நாடன்
வண்டிரைத் துயர்பொழில் மணற்குடி நாடன்
நேரிய னருமொழி நித்த வினோதன்
235 காரிய மல்லதோர் காரிய நினையா
தாராண் டலைமைக் கற்பக சதுசன
பேராண் டலைமைப் புணர்புயத் துரவோன்