180 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
“மதுவிரி வாகையும், பொதுவிறற் படலமும் புறமா கும்மே என்றார் வாய்ப்பியனார்.” (யாப்பருங்கல விருத்தி, ஒழிபியல்) “எப்பொரு ளேனு மொருபொருள் விளங்கச் செப்பி நிற்பது பெயர்ச்சொல் லாகும். ‘வழுவின் மூவகைக் காலமொடு சிவணித் தொழில்பட வருவது தொழிற்சொல் லாகும்.’ ‘சுடுபொன் மருங்கிற் பற்றா சேய்ப்ப விடைநின் றிசைப்ப திடைச் சொல்லாகும்.’ ‘மருவிய சொல்லொடு மருவாச் சொற்கொணர்ப் துரிமையோ டியற்றுவ துரிச்சொல் லாகும்’ என்பது வாய்ப்பியம்.” (யாப்பருங்கல விருத்தி, ஒழிபியல்) ‘எப்பொரு ளேனு மொருபொருள் விளங்கச் செப்பி நிற்பது பெயர்ச்சொல் லாகும்’ ‘வழுவின் மூவகைக் காலமொடு சிவணித் தொழில்பட வருவது தொழிற்சொல் லாகும்’ ‘சுடுபொன் மருங்கிற் பற்றா சேய்ப்ப விடைநின் றிசைப்ப திடைச் செல்லாகும்’ ‘மருவிய சொல்லொடு மருவாச் சொற்கொணர்ப் துரிமையோ டியற்றுவ துரிச்சொல் லாகும்’ என்பது வாய்ப்பியம்” (யாப்பருங்கல விருத்தியுரை, ஒழிபியல்) “இனிச் செந்துறை மார்க்கமும் வெண்டுறை மார்க்கமும் ஆமாறு: நாற்பெரும் பண்ணும், இருபத்தொரு திறனும் ஆகிய இசையெல்லாம் செந்துறை, ஒன்பது மேற்புறமும் பதினோராடலும் என்றிவையெல்லாம் வெண்டுறையாகும் என்பது வாய்ப்பியம்.” (யாப்பருங்கல விருத்தி, ஒழிபியல்) |