மறைந்துபோன தமிழ் நூல்கள் | 179 |
மன்னவ னென்ப தாசிரியம்மே வெண்பா முதலா நால்வகைப் பாவு மெஞ்சா நாற்பால் வருணர்க் குரிய’ என்றார் வாய்ப்பியமுடையா ராகலின்.” (யாப்பருங்கல விருத்தி, செய்யுளியல், 37) “இனிப் பண் நான்கு வகைய, அவை பாலை யாழ், குறிஞ்சி யாழ், மருத யாழ், செவ்வழி யாழ் என்பன. என்னை? ‘பாலை குறிஞ்சி மருதஞ்செவ் வழியென நால்வகைப் பண்ணா நவின்றனர் புலவர்’ என்றார் வாய்ப்பியனார். விளரி யாழோ டைந்து மென்ப. இனிப் பண் சார்பாகத் தோன்றியன திறமாம், என்னை? ‘பண்சார் வாகப் பரந்தன வெல்லாந் திண்டிற மென்ப திறனறிந் தோரே’ என்றாராகலின், அத்திறம் இருபத்தொரு வகைய. ‘அராக நேர்திற முறழம்புக் குறுங்கலி யாசா னைந்தும் பாலையாழ்த் திறனே.’ ‘நைவளங் காந்தாரம் பஞ்சுரம் படுமலை மருள்வியற் பாற்றுஞ் செந்திற மெட்டுங் குறிஞ்சியாழ்த் திறனே.’ ‘நவிர்படு குறிஞ்சி, செந்திற நான்கு மருதயாழ்த் திறனே’ ‘சாதாரி பியந்தை நேர்ந்த திறமே பெயர்திறம் யாமையாழ் சாதாரி நான்குஞ் செவ்வழியாழ்த் திறனே’ என்றார் வாய்ப்பியனார்.” (யாப்பருங்கல விருத்தி, ஒழிபியல்) |