மறைந்துபோன தமிழ் நூல்கள் இலக்கிய நூல்கள் 1. அகத்திணை இப்பெயருடைய நூலிலிருந்து களவியற் காரிகை உரையா சிரியரும், நம்பி அகப்பொருள் உரையாசிரியரும் சில செய்யுள்களை மேற்கோள் காட்டியுள்ளனர். இது அகப்பொருளைக் கூறும் நூல் என்பது இதன் பெயரினாலே தெரிகிறது. இதனை இயற்றிய ஆசிரியர் யார், இயற்றப்பட்ட காலம் எது என்பன தெரியவில்லை. களவியற் காரிகை உரையாசிரியர் கீழ்க்காணும் செய்யுள்களை இந்நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்: நெடுவே றுடக்கியநீர் நீக்குமதி காதல் வடிவே றுடக்கியநீர் மாதோ-நெடுவேய் கணமா மழைக்குவட்டெங் கார்வரைப்பூஞ் சாரல் மணநாறு நின்வரைமேல் வந்து.1 1 கொன்னிலையோர் யாக்கைக்குக் கூடுயிரோ வொன்றென்ப ரென்னுயி ரோரிரண்டா யான்கண்டேன் - மின்னுகலைப் பைம்மலைத்த வல்குற்றுப் பாடகக்காற் றொன்றொன்று வெம்முலைத்து வேல்போல் விழித்து. 2 கொண்டதோர் காதற் குணமுடியாக் கொள்கைத்தேற் குண்டுநீர் வேலைக் குவலயத்தோர்-வண்டின் கணங்காட்டுங் கூந்தலாய் ... ... ... ... மணங்காட்டுங் காந்தள் மலர்.2 3 2. அசதி கோவை அசதி என்னும் ஆயர்மகன்மேல் பாடப்பட்டது அசதி கோவை. இதனைப் பாடியவர் ஒளவையார் என்பவர். இவர், சங்ககாலத்திலிருந்த ஒளவையார் அல்லர்; இடைக்காலத்தில் இருந்த ஓர் ஒளவையார் ஆவர். இக்கோவையின் சில செய்யுள்கள்மட்டும் இப்போது |