மறைந்துபோன தமிழ் நூல்கள் | 297 |
அடிக்குறிப்புகள் 1. சீவக சிந்தாமணி கூறுவது இந்தப் பல்லவ நாடு அன்று; அது பஃல்லவ நாடு என்று பெயர் பெற்றிருந்த பழைய பாரசீக நாடாகும். பதுமையார் கலம்பகம், படுமறை பருவம், பொய்யா பல்லவ தேயம். 2. இந்த அவிநயச் சூத்திரத்தை மயிலைநாதர் தமது நன்னூல் உரையில் (எழுத்தியல், 5ஆம் சூத்திர உரை) மேற்கோள் காட்டியுள்ளார். 3. எனப் பொது வகையாற் கூறி, இன்னவிடத்து இன்ன எழுத்துப் பிறக்கும் என்று விருத்தியுள் விளக்கிக் கூறினார். 4.யாப்பருங்கலக் காரிகைக் காரிகைக்கு உரை எழுதிய குணசாகரர், தமது உரையில் (39ஆம் காரிகை) இந்த வெண்பாவை மேற்கோள் காட்டியுள்ளார். 5. ‘சிறுகாக்கைபாடினியம்’ என்னும் தலைப்பு காண்க. 6.இச் சூத்திரத்துக்கு மயிலைநாதர், நன்னூல் 268 ஆம் சூத்திர வுரையில் இவ்வாறு விளக்கம் கூறுகிறார்: “குன்று என்புழி, ‘குன்று குடையாக் குளிர்மழை தாங்கினான்’ என்னும் பாட்டும், கூதிர் என்புழி, ‘கூதிர் கொண்டிருடூங்கும்’ என்னும் பாட்டும், பண்பு என்புழி, ‘பண்பு கொள் செயன்மாலை’ என்னும் பாட்டும், தோழி என்புழி, ‘தோழி வாழி தோழி வாழி, வேழ மேறி வென்ற தன்றியும்’ என்னும் பாட்டும், விளியிசை என்புழி, ‘விளியிசைப்ப விண்ணக நடுங்க’ என்னும் பாட்டும், முத்துறழ் என்புழி, ‘முத்துற வந்தேங்கி’ என்னும் பாட்டும், குறிப்பினான் முதனின்ற மொழியான் அறியவந்தன. ” 7.இது காக்கைபாடினியார் சூத்திரம் என்றும் கூறப்படுகிறது. 8.இச்சூத்திரம் ‘நக்கிரர் அடிநூல்’ என்னும் நூலின் சூத்திரம் என்றும் கூறப்படுகிறது. 9.இது பாடலனாருரையின் மேற்கோள் என்பர். 10.மேற்படி வெண்பா பூதபுராணச் செய்யுள் என்றும் கூறப்படுகிறது. எனவே, இது மாபுராணச் சூத்திரமா அல்லது பூதபுராணச் சூத்திரமா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. |