பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்315

ஆளத்தி.

மகரத்தி னொற்றாற் சுருதி விரவும்
பகருங் குறினெடில் பாரித்து - நிகரிலாத்
தென்னா தெனாவென்று பாடுவரே லாளத்தி
மன்னாவிச் சொல்லின் வகை.     13

குன்றாக் குறிலைந்துங் கேடா நெடிலைந்து
நின்றார்ந்த மந்நகரந் தவ்வோடு-நன்றாக
நீளத்தா லேழு நிதானத்தா னின்றியங்க
வாளத்தி யாமென் றறி.     14

பாவோ டணைத லிசையென்றார் பண்ணென்றார்
மேவார் பெருத்தான மெட்டாறும் - பாவா
யெடுத்தென் முதலா விருநான்கும் பண்ணிப்
படுத்தமையாற் பண்ணென்று பார்.     15

தோற்கருவிகள்

பேரிகை படக மிடக்கை யுடுக்கை
சீர்மிகு மத்தளஞ் சல்லிகை கரடிகை
திமிலை குடமுழாத் தக்கை கணப்பறை
தமருகந் தண்ணுமை தாவி நடாரி
யந்தரி முழவொடு சந்திர வளைய
மொந்தை முரசே கண்விடு தூம்பு
நிகாளந் துடுமை சிறுபறை யடக்க
மாசி றகுணிச்சம் விரலேறு பாகந்
தொக்க வுபாங்கந் துடிபெரும் பறையென
மிக்க நூலோர் வுரிந்துரைந் தனரே.

மாதர் அணிகலன்கள்

பரியகம்.

பொன்னிதழ் பொதிந்த பன்னிற மணிவடம்
பின்னிய தொடரிற் பெருவிரன் மோதிரந்
தன்னொடு தொடக்கித் தமனியச் சிலம்பின்
புறவாய் சூழ்ந்து புணரவைப் பதுவே.     1