பக்கம் எண் :

316மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

அவ்வாய் மகரத் தணிகிளர் மோதிரம்
பைவாய் பசும்பொற் பரியக நூபுர
மொய்ம்மணி நூலின் முல்லையங் கிண்கிணி
கௌவிய வேனவுங் காலுக் கணிந்தாள்.     2

குறங் செறியொடு கொய்யலங் கார
நிறங்கிளர் பூந்துகி னீர்மையி னுடீஇப்
பிறங்கிய முத்தரை முப்பத் திருகா
ழறிந்த தமைவர வல்குற் கணிந்தாள்.     3

ஆய்மணி கட்டி யமைந்தவிலைச் செய்கைக்
காமர் கண்டிகைக் கண்டிரண் முத்திடைக்
காமற்பொற் பாசங் கொளுத்திக் கவின்பெற
வேய்மருண் மென்றோள் விளங்க வணிந்தாள்.     4

புரைதபு சித்திரப் பொன்வளை போக்கி
லெரியவிர் பொன்மணி யெல்லென் கடகம்
பரியகம் வால்வளை பாத்தில் பவழ
மரிமயிர் முன்கைக் கமைய வணிந்தாள்.     5

சங்கிலி நுண்டொடர் பூண்ஞாண் புனைவினைத்
தொங்க லருந்தித் திருந்துங் கயிலணி
தண்கடன் முத்தின் றகையொரு காழெனக்
கண்ட பிளவுங் கழுத்துக் கணிந்தாள்     6

நூலவ ராய்ந்து நுவலருங் கைவினைக்
கோலங் குயின்ற குளஞ்செய் கடிப்பிணை
மேலவ ராயினு மெச்சும் விறலொடு
காலமை காதிற் கவின்பெறப் பெய்தாள்.     7

கேழ்கிளர் தொய்யகம் மாண்முகப் புல்லகஞ்
சூளா மணியொடு பொன்னரி மாலையுந்
தாழ்தரு கோதையுந் தாங்கி முடிமிசை
யாழின் கிளவி யரம்பைய ரொத்தாள்.6     8